வெள்ளி, 30 மார்ச், 2012

பூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)




கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - கால் கிலோ
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு - கால் டீஸ்பூன் 
சீரகம் -கால் டீஸ்பூன் 
கடலைபருப்பு - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயம் - சிறிது 

செய்முறை:
  • உருளைகிழங்கை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • வெந்த கிழங்கை கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
  • பின்பு அதனுடன் மசித்த உருளை கிழங்கு, மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • பத்து நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும்.
  • பூரி மசாலா கெட்டியாக வேண்டுமென்றால் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை சிறிது தண்ணீரில் கலக்கி ஊற்றி கெட்டியானவுடன் இறக்கவும்.
  • பூரிக்கு நல்ல காம்பினேஷன் கிழங்கு மசாலா ரெடி.
***************************************
பூரி


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை:

  • மேற்சொன்ன பொருட்களை கலந்து பதமான மாவாக பிசையவும்.
  • பிசைந்த மாவை சிறிய உருண்டையாக இட்டு , சிறிய வட்டமாக பரப்பி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
  • பூரி ரெடி 
******************************************

சிம்பிள் வெஜ் ரைஸ் (simple veg rice)

தேவையான பொருட்கள்:
அரிசி - ஒன்றரை கப்
காரட் - 1
உருளை கிழங்கு - 1
வெங்காயம் - 1
தக்காளி - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு பின்ச்

அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கசகசா - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
சின்ன வெங்காயம் - 2


தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் அரிசியை களைந்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • காரட், உருளை கிழங்கு, வெங்காயம், தக்காளி இவற்றை நடுத்தர அளவில் கட் செய்து கொள்ளவும்.
  • அரைக்க வேண்டிய சாமான்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த மசாலாவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். 
  • அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • சாதம் வெந்தவுடன் திறந்து சூடாக பரிமாறவும்.
  • சுவையான மற்றும் சிம்பிள் வெஜ் ரைஸ் தயார்.
  • இந்த முறையில் அரைத்து செய்யும் பொழுது சுவையும், மணமும் அருமையாக இருக்கும்..

செவ்வாய், 27 மார்ச், 2012

ப்ராக்கலி உருளை மசாலா பொரியல்

தேவையான பொருட்கள்:
ப்ராக்கலி - 1
உருளைக்கிழங்கு - 1
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 2 பல்

தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

  • ப்ராக்கலியை சிறிய பூக்களாகவும், உருளையை சிறிய துண்டங்களாகவும் வெட்டி வைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்தவுடன் வெட்டி வைத்துள்ள உருளை கிழங்கை போடவும்.
  • அரை டீஸ்பூன் மசாலா  தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு கிளறி மூடி போட்டு வேக விடவும்.
  • உருளை பாதி  வெந்தவுடன் இப்பொழுது  ப்ராக்கலியை சேர்த்து மீதம் உள்ள மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மறுபடியும் மூடி போட்டு வேகவிடவும்.
  • சிறிது நேரத்தில் இரண்டுமே நன்றாக வெந்துவிடும். உப்பு சரிபார்த்து இறக்கவும்.
  • இப்பொழுது ப்ராக்கலி உருளை மசாலா பொரியல் தயார்.
  • இதனை தயிர் சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

திங்கள், 26 மார்ச், 2012

ராகி இடியாப்பம்

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 5 டீஸ்பூன்

செய்முறை:

  • மேலே குறிப்பிட்ட அனைத்தையும் தண்ணீர் ஊற்றி கலந்து கெட்டியான பதமாக பிசைந்து கொள்ளவும்.
  • இடியாப்ப அச்சில் பிசைந்த மாவை இட்டு இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • இதனை சூடாக பரிமாறவும்.
  • சுவையான ராகி இடியாப்பம் ரெடி.

ஈஸி முட்டை பொரியல்


தேவையான பொருட்கள்:
முட்டை - 3 
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 

செய்முறை:
  • முதலில் வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். முட்டை உதிர் உதிராக வரும் சமயம் அரைத்து வைத்த பொடியை கலந்து இறக்கவும்.
  • டேஸ்டி அண்ட் ஈஸி முட்டை பொரியல் ரெடி.

ஜுக்கினி (zucchini) கூட்டு

ஜுக்கினி என்பது சத்துள்ள ஒரு காய். இதற்கு தமிழில் சீமை சுரைக்காய் என்று பெயர். 



தேவையான பொருட்கள்
ஜுக்கினி - 2
வெங்காயம் -1
தக்காளி - 1
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மசாலா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க 
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு



செய்முறை

  • முதலில் துவரம்பருப்பை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வேக விடவும்.
  • ஜுக்கினி, வெங்காயம் மற்றும் தக்காளியை கட் செய்து கொள்ளவும். வெங்காயத்தை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  • அதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் ஜுக்கினியை அடுத்தடுத்து போட்டு வதங்கும் வரை வேக விடவும்.
  • இப்பொழுது மசாலா தூள் மற்றும் உப்பு போட்டு சிரித்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • காய் நன்கு வெந்தவுடன் வேக வைத்துள்ள துவரம்பருப்பை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
  • சுவையான மற்றும் மிகவும் சத்துள்ள ஜுக்கினி கூட்டு தயார்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப் 
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு 
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு பின்ச் 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 5



செய்முறை
  • முதலில் அரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, முந்திரி போட்டு தாளிக்கவும், அதனுடன் துருவிய இஞ்சி சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது பொடியாக கட் செய்த வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவிடவும்.
  • தக்காளி பாதி வெந்தவுடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
  • மசாலா வாசனை போன பின்பு சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.
  • சுவையான  சிம்பிள் தக்காளி சாதம் தயார்.

பாசந்தி

செய்முறை 


பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - அரை டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 3
பிஸ்தா பருப்பு - 3
முந்திரி பருப்பு - 3
குங்கும பூ - சிறிதளவு



செய்முறை

  • ஒரு வாணலியில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.
  • பால் ஏடு வர வர தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு வரவும்.
  • ஒரு லிட்டர் பால் அரை லிட்டராக குறையும் போது அதிலும் பாதி பாலை (கால் லிட்டர்) எடுத்து வைத்த ஏட்டின் மேல் ஊற்றவும்.
  • இப்போது மீதி உள்ள கால் லிட்டரில் சர்க்கரையை போட்டு கரைந்ததும் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு இதையும் ஏடு எடுத்து வைத்த பாத்திரத்தில் ஊற்றவும்.
  • அதன் மேலே குங்கும பூ சிறிதளவு தூவி பிரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறவும்.
  • இப்போது சுவையான பாசந்தி தயார்.