முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இறால் கிரேவி / Prawn gravy

தேவையானவை: இறால் - 1/4 கிலோ குடமிளகாய் - 2 காளான் - 5 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்த்தூள் - 1 tsp தனியாத்தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 5 tsp சோம்பு - 1/2 tsp பிரிஞ்சி இலை - 1 அன்னாசி பூ - 1 செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும். அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம்
சமீபத்திய இடுகைகள்

பிசிபேளாபாத் / Bisibelabath

தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப்  துவரம் பருப்பு - 1 கப்  வெங்காயம் - 1 தக்காளி - 1 உப்பு - தேவைக்கு  விருப்பமான காய்கறிகள்: காரட் - 1 உருளை கிழங்கு - 2 பீன்ஸ் - 10 வறுத்து அரைக்க: கடலை பருப்பு - 3 tbs உளுத்தம் பருப்பு - 2 tbs தனியா - 2 tbs சீரகம் - 1 tsp மிளகாய் வத்தல் - 4 or 5 மிளகு - 1 tsp பட்டை - 1 லவங்கம் - 2 தாளிக்க: எண்ணெய் or நெய்  - 5 tsp கடுகு - 1/4 tsp உளுத்தம் பருப்பு - 1/2 tsp பெருங்காயம் - 1 pinch கறிவேப்பிலை - 1 கொத்து  அலங்கரிக்க: கொத்தமல்லி -  சிறிது  முந்திரி - 10 செய்முறை:  முதலில் அரிசி, துவரம்பருப்பை கழுவி அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போட்டு குக்கரில் 4 கப் தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.                   காய் கறிகளை தனியாக ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித

சிக்கன் பிரியாணி / chicken biriyani

தேவையானவை: சிக்கன் - 1/4 கிலோ பாசுமதி அரிசி - 1 கப் (160 ml) வெங்காயம் - 1 தக்காளி - 1 or 1/2 தயிர் - 2 tsp இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் பிரியாணி மசாலா தூள் - 1 tsp மிளகாய் தூள் - 1/4 tsp கரம் மசாலா தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு தாளிக்க: நெய் - 5 tsp பட்டை - 1 லவங்கம் - 3 பிரிஞ்சி இலை - 1 சோம்பு - 1/4 tsp முந்திரி - 5 செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம். சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவ

ரசமலாய் / rasamalai

தேவையானவை: பால் - 1/2 கப்  சர்க்கரை - 1/2 கப்  எலுமிச்சை ஜூஸ் - 1 tsp அலங்கரிக்க: பாதாம் பருப்பு - 1 பிஸ்தா பருப்பு - 1 குங்கும பூ - 4 இதழ்கள்  பனீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த) பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும். சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும். அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும். இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும். பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது. ரசமலாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும். இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டு

ரசம் / rasam

தேவையானவை: பூண்டு - 4 பல் மிளகு - 1tsp சீரகம் - 1 tsp புளி - 1 எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 tsp கடுகு - 1/2 tsp வெந்தயம் - 1/2 tsp பெருங்காயம் - 1 பின்ச் கறிவேப்பிலை - 1 கொத்து காய்ந்த மிளகாய் - 1 செய்முறை: புளியை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பூண்டு, மிளகு, சீரகத்தை விழுதாக இடித்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும். அத்துடன் இடித்து வைத்த விழுது, மஞ்சள் தூள் போட்டு வறுக்கவும். நன்கு வாசம் வந்தவுடன் கரைத்து வைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து கொதிக்கும் போது அடுப்பை அணைக்கவும். கம கமவென்ற வாசத்துடன் ரசம் ரெடி. சாதத்துடன் இந்த ரசத்தை ஊற்றி கூட்டு (அல்லது) பொரியலுடன் சாப்பிட அருமையாக இருக்கும். குறிப்பு: தக்காளி விரும்பினால் புளி தண்ணீரில் ஒரு தக்காளி பழத்தை கட் செய்து பிழிந்து விடவும். காரம் அதிகம் விரும்பினால் காய்ந்த மிளகாயை, பூண்டு, சீரகம்,மிளகுடன் சேர்த்து இடித்து கொள்

மசால் வடை / masal vadai

தேவையானவை: கடலை பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு கறிவேப்பிலை - கைப்பிடி அளவு பச்சை மிளகாய் - 1 சிறியது காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு சோம்பு - 1 tsp எண்ணெய் - பொரிக்க செய்முறை: கடலைபருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைபருப்புடன், சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை, நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி கொள்ளவும். சூடான எண்ணையில் தட்டிய வடையினை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சுவையான, மொறு மொறுப்பான மசால் வடை ரெடி குறிப்பு: இதில் கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க கூடாது. அனைத்தும் சேர்த்து பிசையும் போது வடை தட்டும் பக்குவத்தில் வந்து விடும். சரியான பதத்தில் இல்லாமல் சற்று தண்ணீருடன் சேர்ந்து இருப்பது போல இருந்தால் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளாலாம். இதை டீ டைம் ஸ்நாக்-ஆக சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

கத்தரிக்காய் தொக்கு / brinjal thokku

தேவையானவை: கத்தரிக்காய் - 2 வெங்காயம் - 1 தக்காளி - 2 பூண்டு - 2 பல் மிளகு தூள் - 1 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 3 tsp கடுகு - 1/4 tsp உளுத்தம்பருப்பு - 1/2 tsp கறிவேப்பிலை - 1 கொத்து பெருங்காயம் - 1 பின்ச் காய்ந்த மிளகாய் - 2 அலங்கரிக்க: கொத்தமல்லி இலை - சிறிது செய்முறை: ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.  அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வேக விடவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை, தக்காளி விடும் தண்ணீரே போதுமானது. எல்லாம் நன்கு வெந்து குழைந்து வந்தவுடன், மிளகு தூள் தூவி சிறிது பிரட்டி விட்டு பரிமாறலாம். கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார். இது அனைத்து வகையான சாதம், பிரியாணிக்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பு: தக்காளி விரும்பாதவர்கள் அதற்கு பதில் புளி சேர்க்கலாம். காரத்துக்கு காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு தூள்