ஞாயிறு, 25 மார்ச், 2012

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப் 
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு 
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு பின்ச் 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 5செய்முறை
  • முதலில் அரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, முந்திரி போட்டு தாளிக்கவும், அதனுடன் துருவிய இஞ்சி சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது பொடியாக கட் செய்த வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவிடவும்.
  • தக்காளி பாதி வெந்தவுடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
  • மசாலா வாசனை போன பின்பு சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.
  • சுவையான  சிம்பிள் தக்காளி சாதம் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)