தேவையான பொருட்கள்
ஜுக்கினி - 2
வெங்காயம் -1
தக்காளி - 1
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மசாலா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை
- முதலில் துவரம்பருப்பை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வேக விடவும்.
- ஜுக்கினி, வெங்காயம் மற்றும் தக்காளியை கட் செய்து கொள்ளவும். வெங்காயத்தை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் ஜுக்கினியை அடுத்தடுத்து போட்டு வதங்கும் வரை வேக விடவும்.
- இப்பொழுது மசாலா தூள் மற்றும் உப்பு போட்டு சிரித்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
- காய் நன்கு வெந்தவுடன் வேக வைத்துள்ள துவரம்பருப்பை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
- சுவையான மற்றும் மிகவும் சத்துள்ள ஜுக்கினி கூட்டு தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)