ஞாயிறு, 25 மார்ச், 2012

பாசந்தி

செய்முறை 


பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - அரை டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 3
பிஸ்தா பருப்பு - 3
முந்திரி பருப்பு - 3
குங்கும பூ - சிறிதளவுசெய்முறை

  • ஒரு வாணலியில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.
  • பால் ஏடு வர வர தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு வரவும்.
  • ஒரு லிட்டர் பால் அரை லிட்டராக குறையும் போது அதிலும் பாதி பாலை (கால் லிட்டர்) எடுத்து வைத்த ஏட்டின் மேல் ஊற்றவும்.
  • இப்போது மீதி உள்ள கால் லிட்டரில் சர்க்கரையை போட்டு கரைந்ததும் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு இதையும் ஏடு எடுத்து வைத்த பாத்திரத்தில் ஊற்றவும்.
  • அதன் மேலே குங்கும பூ சிறிதளவு தூவி பிரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறவும்.
  • இப்போது சுவையான பாசந்தி தயார்.

1 கருத்து:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)