திங்கள், 26 மார்ச், 2012

ஈஸி முட்டை பொரியல்


தேவையான பொருட்கள்:
முட்டை - 3 
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 

செய்முறை:
  • முதலில் வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். முட்டை உதிர் உதிராக வரும் சமயம் அரைத்து வைத்த பொடியை கலந்து இறக்கவும்.
  • டேஸ்டி அண்ட் ஈஸி முட்டை பொரியல் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)