தேவையான பொருட்கள்:
ப்ராக்கலி - 1
உருளைக்கிழங்கு - 1
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
ப்ராக்கலி - 1
உருளைக்கிழங்கு - 1
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- ப்ராக்கலியை சிறிய பூக்களாகவும், உருளையை சிறிய துண்டங்களாகவும் வெட்டி வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்தவுடன் வெட்டி வைத்துள்ள உருளை கிழங்கை போடவும்.
- அரை டீஸ்பூன் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு கிளறி மூடி போட்டு வேக விடவும்.
- உருளை பாதி வெந்தவுடன் இப்பொழுது ப்ராக்கலியை சேர்த்து மீதம் உள்ள மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மறுபடியும் மூடி போட்டு வேகவிடவும்.
- சிறிது நேரத்தில் இரண்டுமே நன்றாக வெந்துவிடும். உப்பு சரிபார்த்து இறக்கவும்.
- இப்பொழுது ப்ராக்கலி உருளை மசாலா பொரியல் தயார்.
- இதனை தயிர் சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)