கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - கால் கிலோ
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
உருளை கிழங்கு - கால் கிலோ
மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் -கால் டீஸ்பூன்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
- உருளைகிழங்கை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- வெந்த கிழங்கை கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
- பின்பு அதனுடன் மசித்த உருளை கிழங்கு, மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- பத்து நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும்.
- பூரி மசாலா கெட்டியாக வேண்டுமென்றால் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை சிறிது தண்ணீரில் கலக்கி ஊற்றி கெட்டியானவுடன் இறக்கவும்.
- பூரிக்கு நல்ல காம்பினேஷன் கிழங்கு மசாலா ரெடி.
***************************************
பூரிதேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- மேற்சொன்ன பொருட்களை கலந்து பதமான மாவாக பிசையவும்.
- பிசைந்த மாவை சிறிய உருண்டையாக இட்டு , சிறிய வட்டமாக பரப்பி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
- பூரி ரெடி
******************************************
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)