தேவையான பொருட்கள்:
அரிசி - ஒன்றரை கப்
காரட் - 1
உருளை கிழங்கு - 1
வெங்காயம் - 1
தக்காளி - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு பின்ச்
அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கசகசா - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
சின்ன வெங்காயம் - 2
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
அரிசி - ஒன்றரை கப்
காரட் - 1
உருளை கிழங்கு - 1
வெங்காயம் - 1
தக்காளி - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு பின்ச்
அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கசகசா - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
சின்ன வெங்காயம் - 2
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் அரிசியை களைந்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- காரட், உருளை கிழங்கு, வெங்காயம், தக்காளி இவற்றை நடுத்தர அளவில் கட் செய்து கொள்ளவும்.
- அரைக்க வேண்டிய சாமான்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த மசாலாவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு அதில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
- அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
- சாதம் வெந்தவுடன் திறந்து சூடாக பரிமாறவும்.
- சுவையான மற்றும் சிம்பிள் வெஜ் ரைஸ் தயார்.
- இந்த முறையில் அரைத்து செய்யும் பொழுது சுவையும், மணமும் அருமையாக இருக்கும்..
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)