செவ்வாய், 22 மே, 2012

ரசமலாய் / rasamalai


தேவையானவை:
பால் - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
எலுமிச்சை ஜூஸ் - 1 tsp

அலங்கரிக்க:
பாதாம் பருப்பு - 1
பிஸ்தா பருப்பு - 1
குங்கும பூ - 4 இதழ்கள் 

பனீர் செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த)
  • பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும்.
  • சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும்.
  • அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும்.
  • இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும்.
  • பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது.

ரசமலாய் செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும்.

  • இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது
  • ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டும் வந்து விடும். உடனே அதை எடுத்து வைத்த பாலில் ஊற விடவும்.
  • ரசகுல்லா பாலில் நன்கு ஊறி சுவையான ரசமலாய் ரெடி ஆகிவிடும்.
  • ரசமலாய் மேலே துருவிய பாதாம், பிஸ்தா பருப்பு, குங்கும பூ சேர்த்து அலங்கரிக்கவும்.

  • இதை பிரிட்ஜ்-ல் வைத்து ஜில்லென சாப்பிட்டால் ம்..ம்...ம்.....





புதன், 9 மே, 2012

ரசம் / rasam



தேவையானவை:
பூண்டு - 4 பல்
மிளகு - 1tsp
சீரகம் - 1 tsp
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
நெய் - 2 tsp
கடுகு - 1/2 tsp
வெந்தயம் - 1/2 tsp
பெருங்காயம் - 1 பின்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:
  • புளியை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

  • பூண்டு, மிளகு, சீரகத்தை விழுதாக இடித்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • அத்துடன் இடித்து வைத்த விழுது, மஞ்சள் தூள் போட்டு வறுக்கவும்.
  • நன்கு வாசம் வந்தவுடன் கரைத்து வைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  • ரசம் நுரைத்து கொதிக்கும் போது அடுப்பை அணைக்கவும்.
  • கம கமவென்ற வாசத்துடன் ரசம் ரெடி.

  • சாதத்துடன் இந்த ரசத்தை ஊற்றி கூட்டு (அல்லது) பொரியலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு:
  • தக்காளி விரும்பினால் புளி தண்ணீரில் ஒரு தக்காளி பழத்தை கட் செய்து பிழிந்து விடவும்.
  • காரம் அதிகம் விரும்பினால் காய்ந்த மிளகாயை, பூண்டு, சீரகம்,மிளகுடன் சேர்த்து இடித்து கொள்ளலாம்.
  • சளி, இருமல் உள்ளவர்கள் இந்த ரசத்தை குடித்தால் உடனே சரியாகி விடும்.


செவ்வாய், 8 மே, 2012

மசால் வடை / masal vadai



தேவையானவை:
கடலை பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
சோம்பு - 1 tsp
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

  • கடலைபருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊறிய கடலைபருப்புடன், சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

  • அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை, நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி கொள்ளவும்.

  • சூடான எண்ணையில் தட்டிய வடையினை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

  • சுவையான, மொறு மொறுப்பான மசால் வடை ரெடி

குறிப்பு:
  • இதில் கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க கூடாது. அனைத்தும் சேர்த்து பிசையும் போது வடை தட்டும் பக்குவத்தில் வந்து விடும்.
  • சரியான பதத்தில் இல்லாமல் சற்று தண்ணீருடன் சேர்ந்து இருப்பது போல இருந்தால் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளாலாம்.
  • இதை டீ டைம் ஸ்நாக்-ஆக சாப்பிட பிரமாதமாக இருக்கும்.



கத்தரிக்காய் தொக்கு / brinjal thokku



தேவையானவை:
கத்தரிக்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
மிளகு தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் - 3 tsp
கடுகு - 1/4 tsp
உளுத்தம்பருப்பு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 பின்ச்
காய்ந்த மிளகாய் - 2

அலங்கரிக்க:
கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை:

  • ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். 
  • அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • அதனுடன் மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வேக விடவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை, தக்காளி விடும் தண்ணீரே போதுமானது.

  • எல்லாம் நன்கு வெந்து குழைந்து வந்தவுடன், மிளகு தூள் தூவி சிறிது பிரட்டி விட்டு பரிமாறலாம். கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

  • சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்.
  • இது அனைத்து வகையான சாதம், பிரியாணிக்கும் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு:
  • தக்காளி விரும்பாதவர்கள் அதற்கு பதில் புளி சேர்க்கலாம்.
  • காரத்துக்கு காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு தூள் மட்டுமே. அதனால் அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ போடலாம்.