கிழங்கு மசாலா தேவையான பொருட்கள்: உருளை கிழங்கு - கால் கிலோ மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் சீரகம் -கால் டீஸ்பூன் கடலைபருப்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - சிறிது செய்முறை: உருளைகிழங்கை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்த கிழங்கை கைகளால் நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். பின்பு அதனுடன் மசித்த உருளை கிழங்கு, மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும். பூரி மசாலா கெட்டியாக வேண்டுமென்றால் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை சிறிது தண்ணீரில் கலக்கி ஊற்றி கெட்டியானவுடன் இறக்கவும். பூரிக்கு நல்ல காம்பினேஷன் கிழங்கு மசாலா ரெடி. *************************************** பூரி தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவைக்கு தண்ணீர் - த