தேவையானவை:
கத்தரிக்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
மிளகு தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 3 tsp
கடுகு - 1/4 tsp
உளுத்தம்பருப்பு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 பின்ச்
காய்ந்த மிளகாய் - 2
அலங்கரிக்க:
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
- ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
- அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வேக விடவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை, தக்காளி விடும் தண்ணீரே போதுமானது.
- எல்லாம் நன்கு வெந்து குழைந்து வந்தவுடன், மிளகு தூள் தூவி சிறிது பிரட்டி விட்டு பரிமாறலாம். கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்.
- இது அனைத்து வகையான சாதம், பிரியாணிக்கும் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு:
- தக்காளி விரும்பாதவர்கள் அதற்கு பதில் புளி சேர்க்கலாம்.
- காரத்துக்கு காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு தூள் மட்டுமே. அதனால் அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ போடலாம்.
நல்ல ஐடியா! கத்தரிக்காய் பொரியல் செய்வேன், ஆனா தக்காளி சேர்த்ததில்லை, நல்லா இருக்கு கத்தரிக்காய் தொக்கு!
பதிலளிநீக்கு