புதன், 9 மே, 2012

ரசம் / rasamதேவையானவை:
பூண்டு - 4 பல்
மிளகு - 1tsp
சீரகம் - 1 tsp
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
நெய் - 2 tsp
கடுகு - 1/2 tsp
வெந்தயம் - 1/2 tsp
பெருங்காயம் - 1 பின்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:
 • புளியை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

 • பூண்டு, மிளகு, சீரகத்தை விழுதாக இடித்து கொள்ளவும்.
 • ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.
 • அத்துடன் இடித்து வைத்த விழுது, மஞ்சள் தூள் போட்டு வறுக்கவும்.
 • நன்கு வாசம் வந்தவுடன் கரைத்து வைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 • ரசம் நுரைத்து கொதிக்கும் போது அடுப்பை அணைக்கவும்.
 • கம கமவென்ற வாசத்துடன் ரசம் ரெடி.

 • சாதத்துடன் இந்த ரசத்தை ஊற்றி கூட்டு (அல்லது) பொரியலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு:
 • தக்காளி விரும்பினால் புளி தண்ணீரில் ஒரு தக்காளி பழத்தை கட் செய்து பிழிந்து விடவும்.
 • காரம் அதிகம் விரும்பினால் காய்ந்த மிளகாயை, பூண்டு, சீரகம்,மிளகுடன் சேர்த்து இடித்து கொள்ளலாம்.
 • சளி, இருமல் உள்ளவர்கள் இந்த ரசத்தை குடித்தால் உடனே சரியாகி விடும்.


6 கருத்துகள்:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)