ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பிசிபேளாபாத் / Bisibelabath


தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப் 
துவரம் பருப்பு - 1 கப் 
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவைக்கு 

விருப்பமான காய்கறிகள்:
காரட் - 1
உருளை கிழங்கு - 2
பீன்ஸ் - 10

வறுத்து அரைக்க:
கடலை பருப்பு - 3 tbs
உளுத்தம் பருப்பு - 2 tbs
தனியா - 2 tbs
சீரகம் - 1 tsp
மிளகாய் வத்தல் - 4 or 5
மிளகு - 1 tsp
பட்டை - 1
லவங்கம் - 2

தாளிக்க:
எண்ணெய் or நெய்  - 5 tsp
கடுகு - 1/4 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
பெருங்காயம் - 1 pinch
கறிவேப்பிலை - 1 கொத்து 

அலங்கரிக்க:
கொத்தமல்லி -  சிறிது 
முந்திரி - 10

செய்முறை:
 •  முதலில் அரிசி, துவரம்பருப்பை கழுவி அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போட்டு குக்கரில் 4 கப் தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும்.
 • வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.

                 
 • காய் கறிகளை தனியாக ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 • வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து கொள்ளவும்.

 • ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்து அத்துடன் அரைத்த மசாலா, புளித்தண்ணீ ர், வேக வைத்த காய்கறிகள்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.

 • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு வெந்த அரிசி பருப்பு சாத கலவையும் சேர்த்து மூடி போடவும்.
 • 2 or 3 நிமிடங்களில் பிசிபெளாபாத் ரெடி.


 • வறுத்த முந்திரி பருப்பு தூவி அலங்கரிக்கவும்.
 • இதனுடன் அப்பளம் சேர்த்து சாப்பிட மிக்க சுவையாக இருக்கும்.
note:
 • இதில் முள்ளங்கி, முருங்கை காய், பட்டர் பீன்ஸ் போல விருப்பமான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.
 • ஒரு கப் புளி தண்ணீர் சரியான அளவு.

4 கருத்துகள்:

 1. Very clear pictures Packya! Bisibelebath looks delicious!

  Wish You A Happy New Year!

  பதிலளிநீக்கு
 2. அழகான பாத்திரத்தில் சுவையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.com

  பதிலளிநீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)