புதன், 6 ஜூன், 2012

சிக்கன் பிரியாணி / chicken biriyaniதேவையானவை:
சிக்கன் - 1/4 கிலோ
பாசுமதி அரிசி - 1 கப் (160 ml)
வெங்காயம் - 1
தக்காளி - 1 or 1/2
தயிர் - 2 tsp
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பிரியாணி மசாலா தூள் - 1 tsp
மிளகாய் தூள் - 1/4 tsp
கரம் மசாலா தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு

தாளிக்க:
நெய் - 5 tsp
பட்டை - 1
லவங்கம் - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/4 tsp
முந்திரி - 5

செய்முறை:
 • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

 • பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
 • இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
 • சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம்.
 • சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும்.

 • ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
 • நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவும்.
 • அதனுடன் மசாலாவில் நன்கு ஊறிய சிக்கனையும் போட்டு ஒரு 3 நிமிடம் மசாலா வாசனை போக வதக்கி கொள்ளவும்.

 • எல்லாம் சேர்ந்து ஒரு 10 முதல் 15 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். (விரும்பினால் 1 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றலாம்)
 • சிக்கனே தண்ணீர் விட்டு நன்கு வெந்து விடும்.
 • இப்பொழுது பாசுமதி அரிசியுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வெந்த பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

 • கம கம சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்பு:
 • மிளகாய் தூள் விரும்பினால் சேர்க்கலாம் அல்லது அதற்கு பதில் பிரியாணி மசாலாவே தேவையான அளவுக்கு சேர்க்கலாம். (இங்கே நான் சேர்த்து இருப்பது ஷான் (shan) பிரியாணி மசாலா, இது நல்ல சுவையை தருது,
 • அரிசியை சேர்க்கும் முன்பு சிக்கன் கிரேவி அதிக தண்ணீர் இல்லாமல் (திக்கான கூட்டு போல) பார்த்து கொள்ளவும்.
 • இதில் தம் போடாமலே செய்துள்ளேன். (நேரமின்மை காரணத்தால்) 
 • சிக்கன் பிரியாணியை மேற்சொன்ன முறையில் குக்கரிலும் செய்யலாம்.
 • தம் போடும் முறை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.9 கருத்துகள்:

 1. looks so delicious and mouthwatering:)
  happy to follow u dear..
  pls visit and join in my space :)
  http://indiantastyfoodrecipes.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. தெளிவான படங்கள்! நல்ல ரெசிப்பி!

  பதிலளிநீக்கு
 3. Chicken biryani looks delicious dear :) glad to follow you :) Do visit my space if you have time to spare :)

  Participate & win prizes
  The Master Chef Contest
  You Too Can Cook Indian Food Recipes

  பதிலளிநீக்கு
 4. என்னைபோல வெளிநாட்டில் வேலை பாக்கும் பல நண்பர்களுக்கும் பயன்படும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. Hi Packya ,

  Briyani looks Great !!!

  Perfect presentation :)

  Keep on Dear...

  At your free time do visit my blog

  www.southindiafoodrecipes.blogspot.in

  பதிலளிநீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)