செவ்வாய், 22 மே, 2012

ரசமலாய் / rasamalai


தேவையானவை:
பால் - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
எலுமிச்சை ஜூஸ் - 1 tsp

அலங்கரிக்க:
பாதாம் பருப்பு - 1
பிஸ்தா பருப்பு - 1
குங்கும பூ - 4 இதழ்கள் 

பனீர் செய்முறை:
 • ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த)
 • பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும்.
 • சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும்.
 • அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும்.
 • இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும்.
 • பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது.

ரசமலாய் செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
 • கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும்.

 • இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது
 • ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டும் வந்து விடும். உடனே அதை எடுத்து வைத்த பாலில் ஊற விடவும்.
 • ரசகுல்லா பாலில் நன்கு ஊறி சுவையான ரசமலாய் ரெடி ஆகிவிடும்.
 • ரசமலாய் மேலே துருவிய பாதாம், பிஸ்தா பருப்பு, குங்கும பூ சேர்த்து அலங்கரிக்கவும்.

 • இதை பிரிட்ஜ்-ல் வைத்து ஜில்லென சாப்பிட்டால் ம்..ம்...ம்.....

11 கருத்துகள்:

 1. ரசமலாய் நானும் செய்யனும் நினைக்கிறேன்.ம்ம்.சூப்பர்.அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 2. Different recipe than the usual recipe of rasmalai! Adding sugar while making paneer is the thing first time I am hearing!

  Looks yummy-o-yummy! :P :P

  பதிலளிநீக்கு
 3. உங்க ப்ளாக் நல்லாருக்கு.வாழ்த்துக்கள்.
  வெள்ளைவெளேர் ரஸமலாய் பார்க்கவே சூப்பரா இருக்கு.ஒரு நாளைக்கு இதைச் செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. ரசமலாய் வெள்ளைவெளேர் செம சூப்பரா இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. yum yum n yumm...the rasamalais look so delicious...this is a very popular sweet dish of bengalis:-)

  பதிலளிநீக்கு
 6. ரசமலாய் பார்க்க நாவில் நீர் ஊறுகிறது...

  பதிலளிநீக்கு
 7. ரசமான சுவையுடன் ரசமலாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 8. ரசமலாய் ம்ம்ம்ம் சப்பிடனும்போல் தோன்றுகிறது.... சூப்பர்....

  பதிலளிநீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)