செவ்வாய், 8 மே, 2012

மசால் வடை / masal vadaiதேவையானவை:
கடலை பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
சோம்பு - 1 tsp
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

  • கடலைபருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊறிய கடலைபருப்புடன், சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

  • அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை, நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி கொள்ளவும்.

  • சூடான எண்ணையில் தட்டிய வடையினை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

  • சுவையான, மொறு மொறுப்பான மசால் வடை ரெடி

குறிப்பு:
  • இதில் கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க கூடாது. அனைத்தும் சேர்த்து பிசையும் போது வடை தட்டும் பக்குவத்தில் வந்து விடும்.
  • சரியான பதத்தில் இல்லாமல் சற்று தண்ணீருடன் சேர்ந்து இருப்பது போல இருந்தால் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளாலாம்.
  • இதை டீ டைம் ஸ்நாக்-ஆக சாப்பிட பிரமாதமாக இருக்கும்.1 கருத்து:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)