சனி, 9 பிப்ரவரி, 2013

இறால் கிரேவி / Prawn gravy


தேவையானவை:
இறால் - 1/4 கிலோ
குடமிளகாய் - 2
காளான் - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 tsp
தனியாத்தூள் - 2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் - 5 tsp
சோம்பு - 1/2 tsp
பிரிஞ்சி இலை - 1
அன்னாசி பூ - 1

செய்முறை:
 • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.

 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
 • அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

 • வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

 • பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும்.

 • அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.

 • சுவையான இறால் கிரேவி ரெடி.

 • இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு அருமையான காம்பினேசன்.

6 கருத்துகள்:

 1. பாக்கியா இறால் கிரேவி போட்டு அசத்திட்டிங்க போங்க .....கண்டிப்பா நானும் இதே மாதிரி செய்து பார்க்கணும் ...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் !
  தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
  முடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .
  தங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை
  நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு !
  http://blogintamil.blogspot.ch/2013/07/3.html

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3.html
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)