தேவையானவை: இறால் - 1/4 கிலோ குடமிளகாய் - 2 காளான் - 5 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்த்தூள் - 1 tsp தனியாத்தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 5 tsp சோம்பு - 1/2 tsp பிரிஞ்சி இலை - 1 அன்னாசி பூ - 1 செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும். அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம்
தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் துவரம் பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 உப்பு - தேவைக்கு விருப்பமான காய்கறிகள்: காரட் - 1 உருளை கிழங்கு - 2 பீன்ஸ் - 10 வறுத்து அரைக்க: கடலை பருப்பு - 3 tbs உளுத்தம் பருப்பு - 2 tbs தனியா - 2 tbs சீரகம் - 1 tsp மிளகாய் வத்தல் - 4 or 5 மிளகு - 1 tsp பட்டை - 1 லவங்கம் - 2 தாளிக்க: எண்ணெய் or நெய் - 5 tsp கடுகு - 1/4 tsp உளுத்தம் பருப்பு - 1/2 tsp பெருங்காயம் - 1 pinch கறிவேப்பிலை - 1 கொத்து அலங்கரிக்க: கொத்தமல்லி - சிறிது முந்திரி - 10 செய்முறை: முதலில் அரிசி, துவரம்பருப்பை கழுவி அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போட்டு குக்கரில் 4 கப் தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். காய் கறிகளை தனியாக ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித