திங்கள், 16 ஏப்ரல், 2012

ஓட்ஸ் உப்புமா / oats uppuma

தேவையானவை:
ஓட்ஸ் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2 கீறியது
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன்


தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு பின்ச்

செய்முறை:

  • ஓட்ஸ்-ஐ ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

  • பின்பு வறுத்து வைத்த ஓட்ஸ், தேவையான உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • ஓட்ஸ் நன்கு வெந்ததும், எலுமிச்சை சாறை கலந்து இறக்கவும்.

  • சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.
  • இதனை சூடாக பரிமாறவும்.

3 கருத்துகள்:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)