தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு பின்ச்
செய்முறை:
- பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும்.
- பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும்.
- சுவையான நெய் பருப்பு ரெடி.
குறிப்பு:
- இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.
- குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை.
- இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)