முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிக்கன் பிரியாணி / chicken biriyani



தேவையானவை:
சிக்கன் - 1/4 கிலோ
பாசுமதி அரிசி - 1 கப் (160 ml)
வெங்காயம் - 1
தக்காளி - 1 or 1/2
தயிர் - 2 tsp
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பிரியாணி மசாலா தூள் - 1 tsp
மிளகாய் தூள் - 1/4 tsp
கரம் மசாலா தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு

தாளிக்க:
நெய் - 5 tsp
பட்டை - 1
லவங்கம் - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/4 tsp
முந்திரி - 5

செய்முறை:
  • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

  • பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம்.
  • சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும்.

  • ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
  • நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அதனுடன் மசாலாவில் நன்கு ஊறிய சிக்கனையும் போட்டு ஒரு 3 நிமிடம் மசாலா வாசனை போக வதக்கி கொள்ளவும்.

  • எல்லாம் சேர்ந்து ஒரு 10 முதல் 15 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். (விரும்பினால் 1 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றலாம்)
  • சிக்கனே தண்ணீர் விட்டு நன்கு வெந்து விடும்.
  • இப்பொழுது பாசுமதி அரிசியுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வெந்த பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

  • கம கம சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்பு:
  • மிளகாய் தூள் விரும்பினால் சேர்க்கலாம் அல்லது அதற்கு பதில் பிரியாணி மசாலாவே தேவையான அளவுக்கு சேர்க்கலாம். (இங்கே நான் சேர்த்து இருப்பது ஷான் (shan) பிரியாணி மசாலா, இது நல்ல சுவையை தருது,
  • அரிசியை சேர்க்கும் முன்பு சிக்கன் கிரேவி அதிக தண்ணீர் இல்லாமல் (திக்கான கூட்டு போல) பார்த்து கொள்ளவும்.
  • இதில் தம் போடாமலே செய்துள்ளேன். (நேரமின்மை காரணத்தால்) 
  • சிக்கன் பிரியாணியை மேற்சொன்ன முறையில் குக்கரிலும் செய்யலாம்.
  • தம் போடும் முறை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.



















கருத்துகள்

  1. looks so delicious and mouthwatering:)
    happy to follow u dear..
    pls visit and join in my space :)
    http://indiantastyfoodrecipes.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. பிரியாணி சூப்பரா இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. தெளிவான படங்கள்! நல்ல ரெசிப்பி!

    பதிலளிநீக்கு
  4. wow...absolutely deliciosu chicken biryani!!!!!!loved it !!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  5. Chicken biryani looks delicious dear :) glad to follow you :) Do visit my space if you have time to spare :)

    Participate & win prizes
    The Master Chef Contest
    You Too Can Cook Indian Food Recipes

    பதிலளிநீக்கு
  6. என்னைபோல வெளிநாட்டில் வேலை பாக்கும் பல நண்பர்களுக்கும் பயன்படும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. Hi Packya ,

    Briyani looks Great !!!

    Perfect presentation :)

    Keep on Dear...

    At your free time do visit my blog

    www.southindiafoodrecipes.blogspot.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸ்பைசி மீன் குழம்பு / spicy fish kuzhambu

தேவையானவை: மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 புளி - 1 எலுமிச்சை அளவு வெள்ளை எள்ளு - 2 tsp தேங்காய் - 1 பத்தை பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 tsp தனியா தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp சீரக தூள் - 1/4 tsp சோம்பு தூள் - 1/2 tsp தாளிக்க: நல்லெண்ணெய் - 3 tsp கடுகு - 1/2 tsp சீரகம் - 1 tsp வெந்தயம் - 1 tsp பெருங்காயம் - 1 பின்ச் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி மீண்டும் ஒரு முறை கழுவி வைக்கவும். இது மீனின் வாடையை போக்கும். எள்ளு மற்றும் வெங்காயத்தை சிறிது எண்ணையில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்பொழுது அரைத்த விழுது, புளிதண்ணீர், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை நீங்கியவுடன் சுத்தம் செய்த மீனை போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வெந்த பின் இறக்கவ

ரசமலாய் / rasamalai

தேவையானவை: பால் - 1/2 கப்  சர்க்கரை - 1/2 கப்  எலுமிச்சை ஜூஸ் - 1 tsp அலங்கரிக்க: பாதாம் பருப்பு - 1 பிஸ்தா பருப்பு - 1 குங்கும பூ - 4 இதழ்கள்  பனீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த) பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும். சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும். அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும். இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும். பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது. ரசமலாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும். இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டு

நெய் பருப்பு (ghee dal)

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும். சுவையான நெய் பருப்பு ரெடி. குறிப்பு: இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.  குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை. இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.