தேவையானவை: பால் - 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் எலுமிச்சை ஜூஸ் - 1 tsp அலங்கரிக்க: பாதாம் பருப்பு - 1 பிஸ்தா பருப்பு - 1 குங்கும பூ - 4 இதழ்கள் பனீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். (சிறிது பாலை எடுத்து வைக்கவேண்டும். இது ரசமலாய் செய்வதற்கு உபயோகபடுத்த) பால் நன்கு கொதிக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்த எலுமிச்சை துளிகளை விடவும். சில நிமிடங்களில் பால் நன்கு திரிந்து மஞ்சள் நிற நீர் பிரியும். அதை மஸ்லின்(மெல்லிய) துணியில் வடிகட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளவும். இப்பொழுது பனீரை பிசைந்து தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்டி விரலால் அழுத்தி வைக்கவும். பனீர் இப்பொழுது தாயாராக உள்ளது. ரசமலாய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி மீதம் உள்ள சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பனீர் நன்கு உப்பி பெரியதாகும். இப்போது ரசகுல்லா ரெடி ஆகி விட்டது ரசகுல்லவை சிறிது அழுத்தினால் தண்ணீர் மட்டு