தேவையானவை:
சின்ன வெங்காயம் - 10
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைக்க:
தனியா - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
- முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடித்து கொள்ளவும்.
- வெங்காயத்தை இரண்டாகவும், புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கொள்ளவும்.
- பின்னர் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் பரிமாறலாம்.
- ருசியான வெங்காய குழம்பு ரெடி.
- இதனை சாதத்துடன் அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
- வெந்தயம் சேர்த்தால் தான் குழம்பு ருசி கூடும்.
- இதற்கு தக்காளி சேர்க்க வேண்டாம். தக்காளி, குழம்பின் ருசியை மாற்றி விடும்.
Yummy kuzhambu...looks divine in that bowl!
பதிலளிநீக்குthank you mahi
பதிலளிநீக்கு