தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு - 4 பல்
புளி - ஒரு அங்குல துண்டு
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வறுக்க:
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 2
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- தக்காளி, வெங்காயம், பூண்டு இவற்றை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.தேங்காயை துருவி கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.இதனை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். வதங்கிய கலவை ஆறியவுடன் ஏற்கனவே அரைத்து வைத்தவையுடன் சேர்த்து அரைக்கவும்.
- சட்னியில் உப்பு கலந்து தாளித்து கொட்டவும்.
- சுவையான தக்காளி சட்னி தயார்.
குறிப்பு:
- இத்துடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து வதக்கி அரைக்கும் போது சுவை மேலும் கூடும்.
- இது இட்லி தோசைக்கு நல்ல சைடு டிஷ்..
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)