வியாழன், 5 ஏப்ரல், 2012

ரவை பணியாரம்/ rawa paniyaramதேவையானவை:
ரவை - 1 கப்
மைதா - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் ரவை, மைதா, சர்க்கரை, ஏலக்காய் தூளை ஒரு பவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும்.

  • நிறைய தண்ணீர் விட கூடாது. சற்று கெட்டியாக இருக்கும் பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • இதனை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.

  • சிறிது கெட்டியாகி விட்டால் மேலும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
  • குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி பணியாரமாக சுடலாம்.

  • சுவையான மற்றும் எளிதான ரவை பணியாரம் ரெடி.
பின்குறிப்பு:
  • ரவை பணியாரத்தை நேரடியாக எண்ணையிலும் பொறிக்கலாம். அதிக சுவையுடன் நிறைய சாப்பிட தூண்டும். 

1 கருத்து:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)