செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வெங்காய பக்கோடா (onion pakkoda)


தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் - அரை கப் 
கடலை மாவு - அரை கப் 
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 1 பல் 
சோடா உப்பு - 1 பின்ச் 
பெருங்காயம் - 2 பின்ச் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - பொரிக்க 

செய்முறை:
  • ஒரு பௌலில் வெங்காயம், மாவு வகைகள், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, சோடா உப்பு  போடவும்.

  • அதில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

  • அதை சிறிய உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

  • சுவையான வெங்காய பக்கோடா ரெடி.

பின் குறிப்பு:
  • இதனை உதிர் உதிராகவும் போட்டு தூள் பக்கோடா செய்யலாம். 
  • தேவை பட்டால் ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம். கலர்புல்லா இருக்கும்.

4 கருத்துகள்:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)