திங்கள், 9 ஏப்ரல், 2012

மட்டன் பிரியாணி / mutton biriyani


தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப் 
மட்டன் - 300 கிராம் 
நறுக்கிய வெங்காயம் - 1 கப் 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் அளவு 
தயிர் - 4 டீஸ்பூன் 
கொத்தமல்லி இலை - சிறிது 
புதினா இலை - சிறிது 
பிரியாணி மசாலா தூள் - 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க:
நெய் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1
சோம்பு - 1/2
பிரிஞ்சி இலை - 1

செய்முறை:
 • பாசுமதி அரிசியை நன்கு கழுவி 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு உதிர் உதிராக வேக வைத்து கொள்ளவும்.
 • மட்டனை நன்கு கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
 • ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, சோம்பு, இலை போட்டு தாளிக்கவும்.
 • அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதினை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
 • இப்பொழுது மட்டன் மற்றும் தூள் வகைகளை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். 
 • அதில் தயிர், மல்லி, புதினா இலைகள், உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போடவும்.

 • 20 நிமிடங்கள் வரை மட்டன் வேக வேண்டும்.
 • இப்பொழுது குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் நன்கு வற்றி ஒரு திக்கான கிரேவி பதத்திற்கு இருக்கும்.

 • சாதத்தில் தேவைபட்டால் ஒரு பின்ச் புட் கலரை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். அங்கங்கே கலர் கலராக இருக்கும்.
 • ரெடி ஆன கிரேவியை சாதத்தில் நன்கு கலந்து தம் போடவும்.
 • இப்பொழுது சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
குறிப்பு:
 • தம் போடும் முறை 
 • பிரியாணி பாத்திரத்தில் அலுமினியம் பாயில் கவர் செய்து  அவனில்190°C  டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடங்கள் வைக்கலாம்.அல்லது
 • எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரில் warm மோடில் 20 நிமிடங்கள் வைக்கலாம்.

2 கருத்துகள்:

 1. உங்களின் பல குறிப்புகள் அசத்தலாக உள்ளது..மட்டன் பிரியாணி படங்களுடன் அருமையாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. அடுத்த தடவை உங்களுடைய முறையில் பிரியாணி செய்து பார்க்கிறேன். நன்றி.

   நீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)