ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மசாலா தூள் (masala powder)


தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி (தனியா) - கால் கிலோ
மிளகாய் வற்றல் - கால் கிலோ
விரலி மஞ்சள் - 10
சீரகம் - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
சோம்பு - 25 கிராம்
பெருங்காயம் - 15 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
அரிசி - அரை கப்
பட்டை - 5
கறி மசால் இலை - 5செய்முறை:

 • மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு நாள் வெயிலில் நன்றாக காய வைத்து வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக வறுத்து மெஷினில் குடுத்து அரைக்கவும்.
 • இவற்றை வீட்டிலேயே மிக்சியிலும் அரைக்கலாம். ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எடுத்து வறுத்து அரைத்து காற்று புகா பாட்டிலில் போட்டு உபயோகபடுத்தலாம்.  மணமும் அபாரமா இருக்கும்.
 • இதனை அனைத்து வகையான குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல் வகைகள் செய்ய பயன்படுத்தலாம்.3 கருத்துகள்:

 1. கறிமசாலா மிக அருமை.வலைச்சரம் மூலம் வந்தேன்.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
  http://blogintamil.blogspot.in/search?updated-max=2013-01-19T06:00:00%2B05:30

  பதிலளிநீக்கு
 3. வலைசர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.
  சூப்பர் ரெசிப்பிஸ்.
  www.vijisvegkitchen.blogspot.com

  பதிலளிநீக்கு

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)