வியாழன், 19 ஏப்ரல், 2012

எலுமிச்சை ரசம் / lemon rasamதேவையானவை:
எலுமிச்சை பழம் - 1
தக்காளி - 1
பருப்பு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 பின்ச்

செய்முறை:

  • தக்காளியை துண்டங்களாக நறுக்கி ஓவனில் 2 நிமிடங்கள் வைத்து மசித்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மசித்த தக்காளி,பருப்பு வேகவைத்த தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • பூண்டு, மிளகு, சீரகம், பச்சை மிளகாயை நன்கு இடித்து கொள்ளவும்.

  • ரசம் நன்கு கொதிக்கும் போது இடித்து வைத்த கலவையை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.'
  • இப்போது அடுப்பை அணைத்த பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். 
  • தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வறுத்து ரசத்தில் ஊற்றவும்.

  • சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
குறிப்பு:
  • ரசத்தை இறக்கிய பின்னரே எலுமிச்சையை பிழியவும்.
  • எலுமிச்சை பிழிந்த பின் ரசத்தை கொதிக்க வைக்க கூடாது. மறுபடியும் ரசத்தை சூடாக்கினால், ரசம் கசந்து விடும்.
  • இது சாதத்திற்கு ஏற்றது. வெறுமனே குடிக்கவும் ஏற்றது.

3 கருத்துகள்:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)