தேவையானவை:
மீன் - 2 பெரிய துண்டுகள்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
- மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும்.
- தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும்.
- இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.
- இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.
குறிப்பு:
- மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டு தூள் தூவி இறக்கினால் இன்னும் சுவை கூடும்.
- அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.
- இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக
தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)