வியாழன், 12 ஏப்ரல், 2012

கடலை மாவு லட்டு / besan ladooதேவையானவை:
கடலை மாவு - 1 1/2 கப்
ரவை - 3 டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 3/4 கப்
வெண்ணை (அ) நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 5

செய்முறை:

  • வெண்ணை (அ) நெய்யை உருக்கி கொள்ளவும். 
  • ஒரு கடாயில் கடலை மாவு, ரவை மற்றும் வெண்ணை (அ) நெய் ஊற்றி வறுக்கவும். தீ மிதமாகவே இருக்கட்டும்.
  • நன்கு வாசனை வரும் வரை விடாது கிளறி கொண்டே இருக்கவும். 10 நிமிடங்களில் ஒரு கலவையாக திரண்டு வரும் பதத்தில் இதனை ஒரு தட்டில் மாற்றவும்.

  • பாதி சூடு ஆறிய பிறகு ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து சிறிய உருண்டையான லட்டுகளாக பிடித்து கொள்ளவும்.
  • ஒவ்வொரு லட்டின் மேலும் துருவிய பாதாம் பருப்பினை வைத்து அலங்கரிக்கவும்.
  • சுவையான மற்றும் வாசமான கடலை மாவு லட்டு தயார்.
அனைவருக்கும்
"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)