திங்கள், 2 ஏப்ரல், 2012

அஸ்பாரகஸ் பொரியல் (asparagus poriyal)


தேவையானவை:
அஸ்பாரகஸ் - 5
வெங்காயம் - 1 பெரியது 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
தனியா தூள் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் 

தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் 

செய்முறை:
  • அஸ்பாரகஸ் மற்றும் வெங்காயத்தை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.
  • அதில் வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கிய பின்னர் அஸ்பாரகஸ் சேர்த்து தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மூடி போடவும்.
  • அஸ்பாரகஸ் சீக்கிரமே வெந்து விடும்.
  • மசாலா வாசனை போன பின்பு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
  • சுவையான மற்றும் சத்து மிக்க அஸ்பாரகஸ் பொறியல் தயார்.
குறிப்பு
        
இதே செய்முறையில் வெள்ளை அஸ்பாரகஸ் பொரியல் செய்யலாம். இந்த காய் சீக்கிரமே வெந்து விடும். அதிக நேரம் வேக வைக்க தேவை இல்லை.

இதில் வைட்டமின் - ஏ, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் - சி அதிக அளவில் உள்ளது.

1 கருத்து:

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)