செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு பாயாசம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - சிறிதளவு
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் குக்கரில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்..

2. அதனுடன் மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த பச்சரிசியுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும்வரை வேக வைத்து எடுத்துகொள்ளவும்..

3. குக்கரின் மூடியை திறந்து துருவிய வெல்லம், தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்..

4. இறக்கிய பாயசத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சையை போட்டு சூடாக பரிமாறவும்..

5. சுவையான பாசிப்பருப்பு பாயசம் ரெடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)