தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும். சுவையான நெய் பருப்பு ரெடி. குறிப்பு: இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான். குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை. இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
வருக! வருக!
பதிலளிநீக்குMikka nandri
பதிலளிநீக்கு