முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரசம் / rasam



தேவையானவை:
பூண்டு - 4 பல்
மிளகு - 1tsp
சீரகம் - 1 tsp
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
நெய் - 2 tsp
கடுகு - 1/2 tsp
வெந்தயம் - 1/2 tsp
பெருங்காயம் - 1 பின்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:
  • புளியை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

  • பூண்டு, மிளகு, சீரகத்தை விழுதாக இடித்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • அத்துடன் இடித்து வைத்த விழுது, மஞ்சள் தூள் போட்டு வறுக்கவும்.
  • நன்கு வாசம் வந்தவுடன் கரைத்து வைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  • ரசம் நுரைத்து கொதிக்கும் போது அடுப்பை அணைக்கவும்.
  • கம கமவென்ற வாசத்துடன் ரசம் ரெடி.

  • சாதத்துடன் இந்த ரசத்தை ஊற்றி கூட்டு (அல்லது) பொரியலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு:
  • தக்காளி விரும்பினால் புளி தண்ணீரில் ஒரு தக்காளி பழத்தை கட் செய்து பிழிந்து விடவும்.
  • காரம் அதிகம் விரும்பினால் காய்ந்த மிளகாயை, பூண்டு, சீரகம்,மிளகுடன் சேர்த்து இடித்து கொள்ளலாம்.
  • சளி, இருமல் உள்ளவர்கள் இந்த ரசத்தை குடித்தால் உடனே சரியாகி விடும்.


கருத்துகள்

கருத்துரையிடுக

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறால் கிரேவி / Prawn gravy

தேவையானவை: இறால் - 1/4 கிலோ குடமிளகாய் - 2 காளான் - 5 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்த்தூள் - 1 tsp தனியாத்தூள் - 2 tsp மஞ்சள் தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு தாளிக்க: எண்ணெய் - 5 tsp சோம்பு - 1/2 tsp பிரிஞ்சி இலை - 1 அன்னாசி பூ - 1 செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும். அனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம்...

சிக்கன் பிரியாணி / chicken biriyani

தேவையானவை: சிக்கன் - 1/4 கிலோ பாசுமதி அரிசி - 1 கப் (160 ml) வெங்காயம் - 1 தக்காளி - 1 or 1/2 தயிர் - 2 tsp இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 4 பல் பிரியாணி மசாலா தூள் - 1 tsp மிளகாய் தூள் - 1/4 tsp கரம் மசாலா தூள் - 1/4 tsp உப்பு - தேவைக்கு கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு தாளிக்க: நெய் - 5 tsp பட்டை - 1 லவங்கம் - 3 பிரிஞ்சி இலை - 1 சோம்பு - 1/4 tsp முந்திரி - 5 செய்முறை: வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை களைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும். சிக்கன் லெக் எடுத்துள்ளேன். இஷ்டம் போல போன்லெஸ் சிக்கன் கூட எடுத்து கொள்ளலாம். சிக்கனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் (பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ) உப்பு சேர்த்து 10 நிமிஷம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கி கொள்ளவ...

நெய் பருப்பு (ghee dal)

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - ஒரு பின்ச் செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும். சுவையான நெய் பருப்பு ரெடி. குறிப்பு: இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.  குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை. இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.